Monday, December 10, 2007

மாடு சூரியனை மேய்ந்து விட்டுப்போகிறது

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

ல்லா வார்த்தைகளும்
தகர்ந்து விட்டன
மிக வேகமாக வீசியெறியப்பட்ட
அந்தக் குரூரக்கல்லில்
நமக்காயிருந்த
வார்த்தையின் கடைசிமலர்
உடைந்து கிடக்கிறது.

மிஞ்சியிருந்த சொற்களின்
வாசனையும்
குளிர்மையும்
நெருப்பாய் தகிக்கிறது.

எல்லோரும்
சேர்ந்து வெளியிட்ட
மிகப்பெரிய புன்னகை
ஒரு சூரியனில் பிறந்து
அதுவாய் விளங்கியது.

அதன் நிறம்
சிதறடிக்கப்பட்டிருக்கிறது
கீற்றுக்கள்
பிய்க்கப்பட்டுள்ளன.

எல்லாக் கைகளின் முன்பும்
மலராய்க்கிடந்தது.

நமது குரல்களின்
எல்லா வார்த்தைகளாயும்
சிறகுகளாயும்
விரிந்து பறந்தன.

பூந்தோட்டத்தில் வைத்தே
நமது மலர்
சாகடிக்கப்பட்டது
ஒரு அதிகாலையிலேயே
நமது சூரியன்
கிழித்துப் போடப்பட்டது.

கிணறு வற்றி
வெறுமையாய்க் கிடக்கிறது.

நிறம் மாறிய புன்னகைகளும்
ஒலியின் முனைப்புகளுமற்ற
வார்த்தைகளும்
நமது வேலியில்
சிக்குப்பட்டுக் கிடக்கிறது.

வேலியில் அமர்ந்து காத்திருந்த
பறவையின் முகத்தில்
இப்பொழுது
மாடு ஒட்டப்பட்டிருக்கிறது.

கிணற்று வாழியில்
தண்ணீர் குடித்த மாடு
மலரை சிதைத்துவிட்டு
சூரியனை மேய்ந்து கொண்டு
வெள்ளையாய்ப் போகிறது.
----------------------------------------------

3 comments:

றஞ்சினி said...

எம் உணர்வுகளை நெருப்பாக்கும் உங்கள் உண்மை வரிகள் உறைந்துகிடக்கும் மனங்களை நிட்சயம் உலிப்பிவிடும்.

றஞ்சினி

Theepachelvan said...

றஞ்சினி நன்றி
எனது கவிதைகளுக்கு நீங்கள்
தொடர்ந்து சொல்லும்
கருத்துகளை அன்புடன் வரவேற்கிறேன்.

தீபச்செல்வன்

அகதி said...

antha nalai marakka mudiyuma? inrum nenchai pilikirathu antha vali. unkal kavithai alaku. photo is also nice.